Close
நவம்பர் 22, 2024 12:38 காலை

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு… தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை

சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு  நீதி கேட்டு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் தலைவர் மதியழகன், செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் 18 அரசு மருத்துவமனை கள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை கருப்பு அட்டை அணிந்து பணிபுரிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள். பயிற்சி மருத்துவர்கள் என 200 -க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தேசிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை உட னடியாக அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இரவில் மருத்துவர்கள் தங்குமிடங்களில் போதிய அடிப்படை வசதிகள், காவலரை பாதுகாப்பு பணியில் அமர்த்த  வேண்டுமென  வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top