Close
செப்டம்பர் 19, 2024 10:57 மணி

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம்

சிவகங்கை

அலுவலர்களின் போராட்டத்தால் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக்கிடக்கும் சிவகங்கை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம்

சிவகங்கை : ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை, நிறைவேற்ற வலியுறுத்தி   ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரின் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில்  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தின் அனைத்து நிலை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்களில் பணிபுரியும் பல்வேறு நிலை ஊழியர்களும் விடுப்பில் சென்றனர்.மாவட்டம் முழுவதும், 300 அலுவலர்களும், 100 -க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

(பட விளக்கம்- அலுவலர்களின் போராட்டத்தால் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக்கிடக்கும் சிவகங்கை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top