சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது .
இம்முகாமில்,அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என அனைத்து துறைகள் தொடர்பான சேவைகள் குறித்து 1062 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
இந்நிகழ்வில் பொன்னகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகைசாமி, அரசனி முடத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சோலையப்பன், கொட்டகுடிகீழ்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், காட்டுநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், மாங்குடிதெற்குவாடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜலெட்சுமிஅழகன், குடஞ்சாடி ஊராட்சி மன்ற தலைவர் மீனாள்கண்ணன்,வள்ளனேரி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மாதவன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.