Close
நவம்பர் 25, 2024 12:01 காலை

பொன்னமராவதி மேல வட்டம் கிராம நிர்வாக அலுவலகத்தை தரைத்தளத்துக்கு மாற்ற கோரிக்கை

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் பயனற்று கிடக்கும் விஏஓ அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பயனற்று கிடக்கும் மேல வட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை மாற்றுத்திறனாளிகள், பொது மக்களுக்கு பயன்படும் வகையில் தரைத்தளத்தில் இயங்கிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்று. பின்பு புதிதாக திறக்கப்பட்ட கட்டத்தில் செயல் படாமல் பழைய இடத்திலே செயல்பட்டு வருவதால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கையொப்பம் பெற வரும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் மாடிப்படிகளில் ஏற முடியாமல் தடுமாறி தவித்து வருகின்றனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் செந்தில், மூர்த்தி ஆகியோர் கூறியதாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளி களுக்கு என்னதான் முன்னுரிமை வழங்கினாலும்,  எங்களுக் கான உதவிகளை பெற சில அதிகாரிகள் எங்களை அலையவிடும் செயல்களை யாரிடம் சொல்லி வேதனைப் படுவது  என்று தெரியவில்லை.

 பொன்னமராவதி மேல வட்ட கிராம நிர்வாக அலுவலகத் திற்கு ஒரு கையெழுத்து பெற வேண்டும் என்று வந்தால்  படிகளில் ஏறி இறங்க வேண்டி அவலநிலை நீடிக்கிறது. மாற்றுத்திறனாளி ஆகிய எங்களால் எப்படி இத்தனை படிகளில் ஏறி இறங்க முடியும் என்பதை அதிகாரிகள் உணரவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி ஊக்குவித்து வரும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,   இதில் தலையிட்டு,  பொன்னமராவதி மேல வட்ட கிராம நிர்வாக அலுவலகத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றி அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் மேல வட்ட கிராம நிர்வாக அலுவலகத்தின் கீழ் பகுதியில் வாரத்தில் இருநாள் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று மனு வாங்கும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top