Close
செப்டம்பர் 20, 2024 5:41 காலை

காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களையக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர்.

காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிடக் கோரி ஓய்வூதியர்கள் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டத் தலைவர் மா.வேலாயுதம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் மு.முத்தையா மற்றும் நிர்வாகிகள் ஆர்.ராஜேந்திரசிங், இரா.சுப்பிரமணி யன், என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த படி 70 வயது முடிவுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத் தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப் பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top