Close
நவம்பர் 22, 2024 12:16 மணி

ஏப்ரல்-மே மாத ஊதியம் வழங்க கௌரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு  ஏப்ரல் மற்றும் மே மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இது தொடர்பாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கௌரவ விரிவுரையாளர் கள்   விடுத்துள்ள வேண்டுகோள்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி பல ஆண்டு காலமாக பணி நிரந்தரம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு நடைமுறை விதிகளின் படி மார்ச் மாதம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் கல்லூரிகள் நடைபெறாமல் இருந்த காரணத் தினால் தற்போது மே மாதமும் பணி நாட்களாக இருப்பதால் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஏப்ரல்-மே இரு மாதங்களுக்கு ஊதியம் கிடையாது என்று தெரிவித்து வருகிறார்கள். மேலும் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் நாங்கள் குடும்பம் நடத்துவ தற்கு ரொம்ப சிரம்பட்டு வருகிறோம்.

தற்போது பணிபுரிந்து வரும் ஏப்ரல்,மே மாதங்களில் பணிபுரி வதற்கான ஊதியங்களை வழங்கி  வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும் என்பதை கௌரவ விரிவுரையாளர்கள்  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top