Close
நவம்பர் 22, 2024 7:04 காலை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் கல்வி சங்கல்ப பூஜை

புதுக்கோட்டை

புதுகை தெற்கு நான்காம் வீதி ஆஞ்சநேயர் கோயில்ல நடைபெற்ற கல்வி சங்கல்ப பூஜை

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லஷ்மி  ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 3,4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த  ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் அரசு பொது தேர்வு 2023  10 -ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் டிஎன்பிஎஸ்சி  வங்கி, கல்லூரி  தேர்வு  எழுதும்   மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது.

இதையொட்டி ஆலயத்திலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ,ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் சாமிகளுக்கு  அலங்கரிக்கப்பட்ட  ,ஸ்ரீ லெட்சுமி க்கும் மகா தீபாராதனை   நடைபெற்றது.

கல்வி சங்கல்ப பூஜையில்  மாணவ, மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் வைத்து   கல்வி சங்கல்ப பூஜை கே.மணி குருக்கள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. கலந்து கொண்ட  மாணவ, மாணவிகள் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினர் சுமார் 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை
சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற மாணவிகள்

இதையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கல்வியாளர்கள் ஆசிரியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் எளிதாக மாணவ, மாணவிகளுக்கு தேர்வுஎழுதும் வழி முறைகளை பற்றி பேசினார்கள்
இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகிகள்  இலக்கியப் பேரவை நிலவைப்பழனியப்பன்,  இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளின் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிகநெறி யாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்கள்  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top