புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு பல்லவன் குளத்தில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ளது சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மகத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில் பிப்24 -ல் மாசி மகம் என்பதால் கோயில் அருகில் உள்ள பல்லவன் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு பல்லவன் குளத்தை சுற்றி அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாகக் காட்சியளித்தது.