கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி எக்கச்சக்கமான விசேஷங்களை உள்ளடக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது
வாழ்நாளில் ஒருமுறையாவது திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.
இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பங்குனி மாத பௌர்ணமி மார்ச் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:54 தொடங்கி திங்கட்கிழமை 25 ஆம் தேதி பிற்பகல்12:55 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று பங்குனி உத்திரம் என்ற மிகச் சிறப்பான சுபிட்சமான நாளும் வருகிறது.
பங்குனி உத்திர நன்னாளில் மகாலட்சுமி, சாஸ்தா, வள்ளி போன்றோர் அவதரித்தனர். பங்குனி மாதம் பௌர்ணமி மற்றும் முத்திரை நட்சத்திரம் வரும் நாளில் தான் தெய்வங்களுக்கெல்லாம் திருமணம் நடந்தேறியது. பங்குனி உத்திர நாளில் கிரிவலம் வருவது சிறப்பாகும்.