Close
நவம்பர் 21, 2024 9:30 மணி

‘வேற்றுமையில் ஒற்றுமை’ ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர்மொய்தீன் ரம்ஜான் வாழ்த்து

பேராசிரியர் காதர் மொய்தீன்.

வேற்றுமையில் ஒற்றுமை பேணும் முறையை நிலைநிறுத்த பாடுபடவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் ரம்ஜான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் விடுத்துள்ள ஈத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-

உலகில் வாழும் 800 கோடிக்கும் அதிகமான மக்களில் சற்றொப்ப 250 கோடி பேர் முஸ்லிம்களாக இருந்து, இந்த ரமளான் நோன்பைக் கடைப்பிடிக்கிறார்கள்.இறைவன் புறத்தில் இருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஞான வெளிப்பாடாக ‘வஹி’யாக 23 ஆண்டு காலம் வந்து இறங்கிய திருவசனங்களின் தொகுப்புத்தான் திருக்குர்ஆன். இந்த உலகப்பொதுமறையான திருக்குர்ஆன் பிறந்த மாதமும் இந்த ரமளான் மாதம்தான்.

ரமளான் மாதம் நோன்பு மாதமாகவும், குர்ஆனின் மாத மாகவும் முஸ்லிம்கள் மத்தி யில் பேணப்பட்டு வருகிறது. குர்ஆன் கூறும் கொள்கைகளையும், அவற்றை நபியவர்கள் நடத்திக் காட்டிய வழிமுறைகளையும் பின்பற் றியே உலக முஸ்லிம்கள் தங்களின் இஸ்லாமிய மார்க் கத்தைக் கடைப்பிடித்து ஒழுகி வருகிறார்கள்.

ஒன்றே மனித குலம்; ஏகத்துவமான இறைவன் ஒருவனே; பிறப்பால் மானிடர் அனை வரும் சமமானவர்கள்; மலைமேட்டில் பெய்யும் மழைவெள்ளம் உருண்டு திரண்டு பள்ளத்தாக்கில் பாய்வது எப்படி இயற்கையோ, அதைப்போல வளமிக்க வாழ்க்கையில் திளைத்திருப்பவர்கள் ஏழை எளியவர்களுக்குத் தங்களின் செல்வத்திலிருந்து பங்களித்து வையகத்தில் உள்ள வறு மையைப் போக்கவும், நீக்கவும் ஒவ்வொரு மனிதனும் பாடு படவேண்டும். இறைவனை வணங்குவதோடு, இல்லாத எளியவருக்கு வழங்கியும், வாழும் சமுதாயத்தில் உள்ள எல்லாருடனும் இணைக்கமாக இருந்து நல்லிணக்கம் பேணி, யாதும் ஊர்தான்; யாவரும் உறவினர்தாம் என்ற கோட் பாட்டின்படி வாழ்ந்து சிறந்திடவே மனித சமூகம் படைக்கப்பட்டிருக்கிறது. திருக்குர்ஆன் வலியுறுத்தும் இத்தகைய மெத்தகுப் பண்டி கைகளை உள்ளும் புறமும் ஊரும் உலகமும் ஏற்று நடப் பதை வற்புறுத்துவதே ரமளான் நோன்பும், அதுபற்றிப் பேசும் குர்ஆனும் ஆகும்.

இத்தகைய சிறப்புகளைத் தரும் நோன்பைக் கடைப் பிடித்து வாழ்ந்திருக்கும் இந்திய முஸ்லிம் சமுதாயம் எல்லாக் காலத்திலும் ஒரு கையில் திருக்குர்ஆனை ஏந்தியும், மறு கையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏந்தியும் வாழ வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. இந்த ரமளான் பெருநாளில் அதே வாழ்த்தையே வலிமையோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எடுத்துக் கூறுகிறது.

நாடு 18-வது நாடாளுமன்றத் தேர்தலில் ஈடுபட்டிருக்கிறது. இஸ்லாமிய நெறிப்படி வாழ்வது திருக்குர்ஆன் வழி காட்டுகிறது. அதைப்போல இந்திய மக்கள் தங்களுக்குள், ஜனநாயக முறையில், சமூக நீதி, மாநில உரிமை, மத்தியக் கூட்டாட்சி, தனிமனித உரிமைப் பாதுகாப்பு, ஏற்றத் தாழ்வற்ற பொருளாதார சமத்துவம், எல்லாருக்கும் நன்மை யெல்லாம் வந்து சேர்ப் பதற்கான சமூக நலத்திட் டங்கள் நடைமுறைப்படுத்து தல் போன்ற நல்லாட்சித் திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும் இந்திய அரசியல் சாசனமே நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

அத்தகைய அரசியல் அமைப்புச் சட்டத்தை முழுவதுமாக நாட்டில் நடைமுறைப்படுத்தவும், வேற்றுமையில் ஒற்றுமை பேணும் இந்திய வாழ்வியல் முறையை நிலைநிறுத்தவும் பாடுபட்டாக வேண்டும். தேர்தலில் ஜனநாயகக் கடமையான வாக்கு அளிப் பதை கட்டாயக் கடமை யாகக் கருதி அதனை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோளும் முன் வைக்கிறோம்.எல்லாரும் நலமோடு எந்நாளும் வாழ்வதற்கு வாழ்த்துகிறோம்

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து செய்தியில் மேற்கண்டவாறு  கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top