Close
ஜூலை 1, 2024 7:12 காலை

குரும்பபட்டி ஶ்ரீ முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு விழா

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள உள்ள கூவனூத்து- குரும்பபட்டி ஶ்ரீ முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக , விநாயகர் வழிபாடு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன் ஹோமம், நவகிரக ஹோமம், வழிபாடு, முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும் மகாபூர்ணாஹூதி கடம் வலம் வந்த பிறகு கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்ற பிறகு,தீபாராதனையை தொடர்ந்து, மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டது.
பின்னர்  கேரளா மாநிலம் திருச்சூர், மருதமலை, மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, பிள்ளையார்பட்டி, கரூர், சமயபுரம், மேல்மலையனூர், திருவாச்சூர், ராமேஸ்வரம், திருமூர்த்தி அணை மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து கோயிலைச்சுற்றி வலம் வந்து, கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு , சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில், கூவனூத்து, குரும்பபட்டி ஊராட்சிக்குட்பட்ட 8 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top