Close
செப்டம்பர் 20, 2024 1:37 காலை

அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம் 

குரோதி – ஆடி 25 – ஆகஸ்ட் 10 சனி
நல்ல நேரம்: காலை 7.45 – 8.45; மாலை 4.45 – 5.45
திதி: வளர்பிறை சஷ்டி நள்ளிரவு 3.36 பிறகு சப்தமி
நட்சத்திரம்: சித்திரை; அதிகாலை 4.36 பிறகு சுவாதி
யோகம்: மரண அமிர்தயோகம்
வார சூலை: கிழக்கு-
குளிகை: காலை 6.00 – 7.30
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1:30 – 3,00
சந்திராஷ்டமம்: சதயம்

இன்று தினப்பலன்
மேஷம்: அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்: உயர்வு செய்திகள் வரும். பரணிக்கு பெரிய சுமை தீரும். இழுபறி விஷயங்கள் முடிவுக்கு வரும். பரணிக்கு எதிர்பாராத பணவரவு.
ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: கவலைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். பணப்பற்றாக்குறை ஏற்படாது. ரோகிணிக்கு குடும்ப நிலைமை திருப்தியாக இருக்கும்.
மிதுனம் : மிருகசீரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதம்: போட்டி, எதிர்ப்பு விஷயங்கள் விலகும். திருவாதிரைக்கு தொழில் போட்டிகள் நீங்கும். புனர்பூசத்தினரின் சுபகாரியம் முடிவாகும்.
கடகம்: புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்: உத்தியோக இட நெருக்கடி, அதிகாரிகளின் நிர்ப்பந்தம் விலகும். வீண் சச்சரவுகள் மறையும். பூசத்துக்கு பெண்களால் தொந்தரவு ஏற்படும்.
சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்: பெயர், புகழ், அந்தஸ்து உயரும். எதிர்பாராத அதிர்ஷ்ட சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் வாரிசுகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
கன்னி : உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்: வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. மிகப்பெரிய சாதகம் ஏற்படும். அஸ்தத்துக்கு எதிர்பாராத செலவு ஏற்படும்.
துலாம்: சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்: திட்டமிட்டுள்ள விஷயங்கள் தடையில்லாமல் நிறைவேறும். சுவாதிக்கு தாய்வழி சொந்தத்தால் நிறைய ஆதாயம் காத்திருக்கிறது.
விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை: இழுபறியில் நிற்கும் விஷயங்கள் முடிந்து நிம்மதி உண்டாகும். புதிய தொழிலில் கவனம் தேவை. கேட்டைக்கு திடீர் பணவரவு.
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: எல்லாவற்றிலும் வெற்றி உண்டு. தொழில்ரீதியான போட்டிகள் நீங்கும். மூலத்தினரின் நீண்டநாள் போராட்டங்கள் முடிவுக்கு வரும்.
மகரம் : உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ம்பாதம்: பல வாரமாக நீடித்து வரும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். உத்திராடத்தினர் குடும்பத்துடன் ஆன்மிக பயணம் மேற்கொள்வர்.
கும்பம் : அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: புதிய சொத்து வாங்கும் முடிவை எடுப்பீர்கள். கவலை தரும் விஷயங்கள் முடிவுக்கு வரும். பூரட்டாதிக்கு அதிர்ஷ்டமான நாள்.
மீனம் : பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி: புதிய முயற்சிகள் வெற்றி பெறும். காரணமற்ற நெருக்கடிகளுக்க தீர்வு கிடைக்கும். ரேவதியினரின் நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top