Close
செப்டம்பர் 19, 2024 7:21 மணி

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: சிவசிதம்பரம் பாடலுக்கு எழுந்து நின்ற முதலமைச்சர்

சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடலை பாடுவதை கேட்டதும், பாடல் முடியும் வரை எழுந்து நின்ற முதலமைச்சர்

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைக்க வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்

அருள்மிகு பழனி ஆண்கள் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணியளவில், சென்னையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் வாயிலாகத் துவக்கி வைத்தார். அப்போது சீர்காழி சிவசிதம்பரம் பக்திப்பாடல்களை பாடிகொண்டிருந்தார். அதனை கண்ட முதல்வர் ஸ்டாலின், பாடல் முடியும் வரை எழுந்து நின்றிருந்தார்

அதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள கம்பத்தில் மாநாட்டு கொடி ஏற்றப்பட்டது.

மொத்தமாக இங்கு 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திரையரங்கு மற்றும் நூலகத்தை அமைச்சர் சேகர்பாபு, ஐ. பெரியசாமி, அரா சக்கரபாணி ஆகியோர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தனர். அதனைத் தொடந்து மாநாடு நடைபெறும் அருணகிரிநாதர் அரங்கில் ஆதீனங்கள், அமைச்சர்கள் சிறப்பு உரை ஆற்றினர். மேலும் மாநாட்டு மலரும் வெளியிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top