Close
நவம்பர் 14, 2024 9:06 மணி

நாகூர் தர்காவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாசர் ஆய்வு

நாகூர் தர்காவில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாசர்

இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுவது நாகூர் தர்கா. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி இந்துக்கள் உள்ளி்ட்ட அனைத்து தரப்பு ஆன்மிக வாதிகள் வழிபாடும் செய்யும் ஒரு சுற்றுலா தளமாகவும் இது உள்ளது.

நாகூர் தர்காவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில்  பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை  அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆவடி.சா.மு.நாசர் ஆகியோர் இன்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அறங்காவலர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட திமுக  செயலாளர்-தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கெளதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி, முதன்மை அறங்காவலர் கலிஃபா மஸ்தான் சாஹீத், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி-மேம்பாட்டுக் கழகத் தலைவர் மதிவாணன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோரும் சென்று இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top