Close
நவம்பர் 21, 2024 4:33 மணி

ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்..!

குத்துவிளக்கேற்றி கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறந்துவைத்த எம்எல்ஏ சரவணன்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம், செயல்  அலுவலருக்கான அலுவலகம் ஆகியவை  திறந்துவைக்கப்பட்டன.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.3 கோடியே ஒரு லட்சத்தில் திருமண மண்டபம் மற்றும் ரூ.64 லட்சத்தில் செயல் அலுவலருக்கான அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.  இந்தக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

அதேவேளையில், புதிய கட்டடங்கள் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ சரவணன் பேசியதாவது,  நான் பல்வேறு வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்ய படவேடு பகுதிக்கு வந்தபோது என்னிடம் இப்பகுதி ஆன்மீக பக்தர்களும், பொதுமக்களும், கோவில் நிர்வாகிகளும்  கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் புதிய திருமண மண்டபம் மற்றும் செயல் அலுவலர் அலுவலகம் ஆகிய இரண்டு கட்டிடங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

படவேடு பகுதிக்கு புதிய திருமண மண்டபம் மற்றும் செயல் அலுவலர் அலுவலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் ரூ 3.1 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் ரூ 64 லட்சத்தில் புதிய செயல் அலுவலர் அலுவலகத்தையும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டிடத்தையும் அ மைத்து அ த ன் மூலம் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இப்போது குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்துள்ளோம் என எம்எல்ஏ பேசினார் .  இந்நிகழ்ச்சியில்  கோயில் செயல் அலுவலா் பழனிசாமி, உதவிக் கோட்டப் பொறியாளா் சங்கரராமன், போளூா் ஒன்றியக் குழுத் தலைவா் பெ.சாந்தி பெருமாள், அறங்காவலா் குழுத் தலைவா் சே.விஜயா சேகா், ஆய்வாளா்கள் நடராஜன், மணிகண்டபிரபு, மேலாளா் மகாதேவன், எழுத்தா்கள் சீனுவாசன், மோகன், ரவி, கோயில் புலவா் சிவக்குமாா், அறங்காவலா்கள் மோகன்தாஸ், சுதாகா், சொந்தாமரை, நீதிமன்னன் மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top