Close
நவம்பர் 21, 2024 5:06 மணி

திருச்சி அருகே அன்னாபிஷேக அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்

அன்னாபிஷேக அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்.

இறைவன் நமக்கு கொடுத்த  அன்னத்தை அவருக்கு அர்ப்பணித்து நம் நன்றியை காட்டும் நாள் தான் அன்னாபிஷேக நாள். இறைவனுக்கு  செய்யும் அபிஷேக பொருட்களில் ஒன்றாக ஆகமங்களில் கூறப்பட்டிருக்கும் பொருள்  அன்னம். அதாவது வடித்த சோறு. கோயில்களில் ஈசனுக்கு முறைப்படி அன்னாபிஷேகம் செய்தால் நாட்டில் வளம் பெருகும், மழை சிறக்கும். பயிர்கள் வளரும். பசி பஞ்சம் பட்டினி அகலும். அன்னாபிஷேகம் செய்தால் அவர்கள் ஒரு கல்ப காலம் சிவலோகத்தில் என்கிறது பேரூர் புராணம்.

ஐப்பசி மாதத்தில் பவுர்ணமி நாளில்  அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகம் நடைபெறும் ஸ்தலங்களில் மாலை நேரத்தில் அன்னாபிஷேகத்தை துவங்கி விடுவார்கள்.

அந்த வகையில் இன்று திருச்சி அருகே உள்ள சர்க்கார் பாளையத்தில் சோழர் காலத்து கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிேஷக நிகழ்வில்  கௌரி சங்கர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top