Close
ஏப்ரல் 4, 2025 5:52 காலை

தினமும் மூன்று முறை நிறம் மாறும் சிவலிங்கம்

1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம் தினமும் மூன்று வேளையும் நிறம் மாறுகிறது. இதுவரை இதன் மர்மம் துலங்கவில்லை.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது.
தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த சிவனின் பெயர் அக்ஷலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும். இந்த லிங்கமானது காலை, நண்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது.

இந்த அதிசயமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது. காலை நேரங்களில் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் , நண்பகலில் காவி நிறத்தில் காட்சியளிக்கிறது. இரவில் கருப்பாக காட்சியளிக்கிறது. மீண்டும் காலையில் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது.
இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில் இரவெல்லாம் கருப்பு நிறத்தில் இருக்கும் இறைவன் பகலில் சிவப்பு நிறத்தில் மாறி பக்தர்களை ஆசிர்வதிப்பதாக நம்புகின்றனர்.
மேலும் இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது , இந்த சிவலிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்குக் கீழே புதைந்து கிடக்கிறது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்துகிற இது ஆலயமாக விளங்குகிறது.

பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இது தான். இந்த இடம்தான் பூமியின் மையமாக இருக்கும் என கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். திருமணம் ஆகாதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணை அமைந்து விடும் என்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top