Close
டிசம்பர் 23, 2024 8:24 காலை

திருவண்ணாமலையில் 24ஆம் தேதி ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழா

திருஅண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி தற்போதும் பல குருவிளையாடல் நடத்தி வரும் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 96 ஆம் ஆண்டு ஆராதனை விழா ( குருபூஜை) திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் வெகு சிறப்பாக வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் காஞ்சிபுரத்தில் 1870-ல் பிறந்தார். பிறகு தை மாதம் 1889 முதல் திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டு காலம் வாழ்ந்து வந்த மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பல அற்புதங்களை திருவண்ணாமலையில் நடத்திக் காட்டினார். மார்கழி மாதம் 1929- ல் ஜீவசமாதி அடைந்தார்.

திருவண்ணாமலையில் மலைக்குத் தென்புறம் செல்லும் கிரிவலப் பாதைக்கு செங்கம் சாலை என்று பெயர். அச்சாலையின் கிழக்குப் பாகத்தில் சாலைக்கு வடப்புறம் ஸ்ரீ சேஷாத்திரி ஆஸ்ரமம் அமைந்துள்ளது. அவ்வாஸ்ரமத்துள் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் சமாதிக் கோயில் அமைந்துள்ளது.இன்றும் ஜீவசமாதியில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

மார்கழி அஸ்தம் நட்சத்திரத்தன்று ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.

அதன்படி ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் முக்தி அடைந்த மார்கழி அஸ்த நட்சத்திர தினமான வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆராதனை பெருவிழா விவரம் வருமாறு;

நாளை திங்கட்கிழமை 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருக்கோயில் ஓதுவார் குமாரசாமி குழுவினர் வழங்கும் தேவார இன்னிசை,

மாலை 5 மணிக்கு அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் “சேஷகான இசைமணி” நாத கலாநிதி அப்பு குழுவினரின் நாதஸ்வர மங்கள இசை,

இரவு 7 மணிக்கு “சேஷா சிந்தாமணி” சேது கணேஷ் குழுவினரின் சேஷகவியின் சேஷ கானம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
24 ஆம் தேதி ஆராதனை தினத்தன்று
அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை , 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஓதுவார் கணேசன் குழுவினரின் திருவெண்பா மாலை ,தேவார இன்னிசை நிகழ்ச்சி,

காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமம் , மஹா பூர்ண ஆ கிருதி, மகா ஆரத்தி அதனைத் தொடர்ந்து, சாதுக்களுக்கு ஆடை தானம் செய்து மகேஸ்வர பூஜை, பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது.
அன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீ கலா ரத்னா நாட்டியாலயா வழங்கும் சேஷ நாட்டிய நிகழ்ச்சியும்

மாலை 5.30  மணிக்கு மகான் திருவீதியுலா நிகழ்ச்சி இன்னிசை கச்சேரிகளுடன் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top