Close
நவம்பர் 22, 2024 4:49 காலை

தேசிய ரோல் பால் போட்டி… தங்கம் வென்ற தமிழ்நாடு அணியில் விளையாடிய பொன்னமராவதி மாணவி

புதுக்கோட்டை

தேசிய ரோல் பால் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனை பொன்னமராவதி தச்சம்பட்டி பவித்ரா

தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற  தமிழ்நாடு அணியில் பொன்னமராவதி தச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பவித்ரா  பங்கேற்று விளையாடி சிறந்த வீரருக்கான விருதினை பெற்றார்.

தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலம் பெல்ஹாமில்  நடைபெற்றது. இப்போட்டியில்   தமிழ்நாடு உள்பட பல்வேறு  மாநிலங்களைச் சார்ந்த  பனிரெண்டு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

பரபரப்பாக நடைபெற்று முடிந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு ரோல்பால் அணியினர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்ததுள்ளனர்.

புதுக்கோட்டை
தேசிய ரோல் பால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி

தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன்  மாநிலத் தலைவர் சீனிவாசன்,மாநில தலைவர் சரவணன்,மாநில செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையிலான தமிழ்நாடு அணி இப்போட்டியில் களம் கண்டது.

தமிழ்நாடு அணியில்  பொன்னமராவதி அருகே உள்ள தச்சம்பட்டி கிராமத்தை பூர்வமாக கொண்ட திருச்சி எஸ்ஆர்வி பள்ளிக்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவி பவித்ரா பங்கேற்று விளையாடி சிறந்த வீரருக்கான விருதினைப் பெற்றார்.

தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழ்நாடு அணியினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பவித்ராவின் வெற்றியை பொன்னமராவதி அருகே உள்ள தச்சம்பட்டி கிராம மக்கள் அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top