புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 3-வது மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளுடன் டேபிள் டென்னிஸ் விளையாடினார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தை விளையாட்டின் தலைநகரமாக்கும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், விளையாட்டிற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்தி வருகிறார்.
மேலும் உலக தரத்திலான பல்வேறு வகையான போட்டிகளை தமிழகத்தில் நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் கள். அதன்படி, 3-வது மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட் டுப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், விளையாட்டுத் துறைக்கு அளித்து வரும் உற்சாகத்தின் காரணமாக நடந்து முடிந்த, அகில இந்திய பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை பெற்று 3-ஆம் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது.
மேலும் தமிழகத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்புடன் பங்கேற்று அதிக அளவிலான பதக்கங்களை பெற்று 2-ஆம் இடம் பிடித்துள்ளனர். இதன் காரணமாக விளையாட்டில் ஆர்முடைய மாணவ, மாணவிகள் தாங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அதிக அளவிலான வெற்றிகளை பெற உற்சாகம் அளிக்கும்.
அந்தவகையில் 3-வது மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட் டுப் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமையாகும். கல்வி, கலை ஆகியவற்றை உற்சாகப்படுத் துவது போல் விளையாட்டுத் துறையில் ஈடுபடுவோர் களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற ஊக்கப்படுத்திட வேண்டும்.
எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியுடன் சேர்ந்து விளையாட்டிலும் தங்களது ஆர்வத்தினை காண்பித்து சிறப்பானதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் எனசட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்த 3-ஆவது மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் 02.02.2024 முதல் 07.02.2024 வரை புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கையுந்துபந்து, கோ-கோ, கபாடி, கைபந்து, இறகுபந்து, மேசைப்பந்து, டென்னிஸ், எறிபந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டி களில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார்,
மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சி.நிர்மலாதேவி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரெ.தங்கராஜு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.