தமிழ்நாடு மாநில அளவிலான நீச்சல் போட்டியில்ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
ஏழாவது தமிழ்நாடு மாநில அளவிலான நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
கேரள ஸ்போர்ட்ஸ பெர்சன் அசோசியேசன் (கெஸ்பா) மற்றும் டால்பின் ஸ்விம்மிங் அகாடெமி இணைந்து சென்னையில் மாநில அளவிலான நீச்சல் போட்டியை நடத்தியது.
இதில் வெங்கடேஸ்வரா மெட்ரிக்,மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம். தனுஷ்கிருஷ்ணன் 100 மீ பிரீஸ்டைல் பிரிவில் மூன்றாம் இடமும், 200 மீ ப்ரீஸ்டைல் பிரிவில் மூன்றாம் இடம் மற்றும் 4 x50மீ மெட்லி ரிலே பிரிவில் முதல் இடம், 4 x 50 மீ ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் மூன்றாம் .இடம் பெற்றார்.
எம்.நிஷாந்த் கிருஷ்ணன் 4 x 50மீ மெட்லெட் ரிலே பிரிவில் முதல் இடம், மற்றும் 4 x 50மீ மிக்ஸ்டு ரிலே பிரிவில் மூன்றாம் இடம், பெற்றுள்ளார். எம். சந்தோஷினி; 4 x 50மீ மிக்ஸ்டு ரிலே பிரிவில் முதல் இடம் மற்றும் 4 x 50 மீ ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் மூன்றாம் .இடம் பெற்றுள்ளார்.
வி. தேவிகா 4 x 50 மீ மிக்ஸ்டு ரிலே பிரிவில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். தமிழ்நாடு மாநில அளவிலான நீச்சல் போட்டி யில் வெற்றிபெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர் களுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதிபிள்ளை உள்ளிட்ட ஆசிரியர்கள் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.