Close
ஏப்ரல் 4, 2025 10:38 மணி

சிவகங்கையில் சுதந்திர தின விழா கால்பந்து போட்டி: திருமங்கலம் அணி சாம்பியன்…

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற அணிகள்.

சிவகங்கையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் திருமங்கலம் அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.

சிவகங்கை ஐவர் கால்பந்தாட்ட மைதானத்தில்  நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம், திருமங்கலம், இளையான்குடி, காரைக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்பந்துக்கழகத்தைச்சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன.

போட்டியை மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணா தொடக்கி வைத்தார். இறுதிப் போட்டியில் அதிகப்புள்ளிகள் எடுத்து  திருமங்கலம் வேல்ஸ் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், முதலிடம் பிடித்த திருமங்கலம் அணிக்கு வெற்றிக் கோப்பையை முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் வழங்கினார். இரண்டாமிடம் பிடித்த மதுரை ஏரோன் அணிக்கான பரிசை ராமநாதபுரம் இளைய மன்னர் ஆதித்யாசேதுபதி    வழங்கினர். ஏற்பாடுகளை கால்பந்தாட்ட பயிற்சி யாளர்கள் கார்த்திக், முத்துகிருஷ்ணன், சங்கர், லெனின், சேது  குழுவினர் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top