சிவகங்கை கால் பந்தாட்டக் கழகம் சார்பில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடத்தப்பட்ட மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் கால்பந்துக்கழக அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
சிவகங்கை மருதுபாண்டியர் நகர் மின்னொளி மைதானத்தில் மாநில அளவிலான மின்னொளி கால் பந்து போட்டி இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 26 அணிகள் பங்கேற்று விளையாடின.
இறுதிப் போட்டியில், சிவகங்கை அணியுடன் மோதிய தஞ்சாவூர் அணி அதிகப் புள்ளிகள் எடுத்து சாம்பியன் கோப்பையை வென்றது. இரண்டாவது இடத்துக்கான கோப்பை சிவகங்கை அணிக்கு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் ராமநாதபுரம் இளைய மன்னர் ஆதித்ய சேதுபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி. ராஜசேகரன்,ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்(ஓய்வு) முனியாண்டி, தொழிலதிபர் குமார், பச்சேரி சிஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வென்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி வாழ்த்தினர்.
இதில், கால்பந்துக்கழக செயலாளர், உடற்கல்வி ஆசிரியர் சிக்கந்தர், சுந்தரராஜன், முத்துக்கிருஷ்ணன், ஏ.சக்திவேல், எம்.முத்துக்கார்த்தி, பி.கிருஷ்ணன்கவுதம் , கால்பந்தாட்ட ரசிகர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.