Close
நவம்பர் 14, 2024 10:39 மணி

திருச்சி பொன்மலையை கலக்கும் கட்டை பேட் விளையாட்டு போட்டி

கட்டை பேட் விளையாட்டில் ஒரு காட்சி.

திருச்சி பொன்மலையில் கட்டை (மட்டை) பூப்பந்தாட்டம் போட்டி, நண்பர்கள் குழு 7ஆம் ஆண்டு ஐவர்  பகல் நேர ஆட்டம்  இரண்டு நாட்கள் போட்டி பொன்மலை மார்க்கெட் அருகில் நடந்து வருகிறது.

பிரிட்டீஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பல இடங்களில் தங் கியிருந்தனர் அதில் ஒன்று திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதியாகும்ங இங்கு வாழ்ந்த ஆங்கிலேயர்கள் ஓய்வு நேரங்களில் ஹாக்கி, கால்பந்து, போன்ற விளையாட்டுகளுடன் பூப்பந்தாட்டமும் ஆடுவார்கள்.

பந்துக்கான மட்டை நரம்பு வலையால் பின்னப்பட்டு வெள்ளைக்காரர்கள் ஆ……என கத்திக்கொண்டே குதித்து, குதித்து விளையாடுவதை வேடிக்கைப் பார்த்து வியந்த நம்ம… ஆட்கள் சும்மாயிருப்பார்களா?

இந்த விளையாட்டை விளையாட ஆசைப்பட்டவர்களுக்கு தேவையான பேட் வாங்க பொருளாதாரம் இடம் தராததால் பிறந்த ஐடியாவே. கட்டை பேட் முதலில் அட்டையை பேட்டாகவும், துணிகளை கருட்டி, உருட்டி பந்தாகவும் பயன்படுத்த நாளடைவில் மர பலகை. பிளைவுட் என உருமாற்றம் பெற்று இன்றளவும் திருச்சி பொன்மலை பகுதியை கலக்கி வருகிறது கட்டை பேட் விளையாட்டு.

ஏராளமான ரசிகர்களை கொண்ட இந்த கட்டை பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடும் போது கட்டை பேட்டில் பந்து படும் போது எழுந்திடும் ஓசை பார்த்து ரசிப்பவர்களுக்கு உற்சாகத்தையும்,பரவசத்தையும் உண்டாக்கும் என்கிறார்கள் கட்டை பேட் ரசிகர்கள்.

பொன்மலை ரயில்வே காலனியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு அருகிலும் கட்ட பேட் மைதானம் கட்டாயம் இருக்கும். இரவு பகல் ஆட்டம் இருவர், ஐவர் அணிகள் என அமைத்து மோதும் கட்டை பேட் விளையாட்டை நடத்த விளையாட்டு கிளப்களும் உண்டு, வெற்றிக்கான பரிசாக பெருந்தொகையும் உண்டு.

இந்திய அளவில் எங்கும் இல்லாத கட்டை பேட் விளையாட்டை வாய்ப்பிருந்தால் ஒருமுறை நேரில் பார்த்து மகிழுங்கள் என்கிறார் கட்டை பேட் விளையாட்டின் தீவிர ரசிகரான மக்கள் சக்தி இயக்கம் கே.சி.நீலமேகம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top