புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளார்.
தமிழ்நாடு மாநில அக்வேட்டிக் அசோசியேசன், மாநில அளவிலான 18வது நீச்சல் சேம்பியன்ஷிப் போட்டியை மதுரையில் நடத்தியது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். அதில் வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி வெ.தேவிகா 100மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக், பெண்களுக்கான குரூப்-4 பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
நீச்சல் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்ற ஐந்தாம் வகுப்பு மாணவி தேவிகாவை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பள்ளியின் இயக்குனர் சுதர்சன், துணைமுதல்வர் குமாரவேல் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். உடன் மாணவியின் பெற்றோர்கள் வெங்கடேசன் – கார்த்திகா உள்ளனர்.