Close
செப்டம்பர் 20, 2024 5:56 காலை

ஈரோட்டில் ஆகஸ்ட் மாதம் அகில இந்திய சிட்டிங் வாலிபால் போட்டி: தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநிலத்தலைவர் மக்கள் ஜி. ராஜன் தகவல்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற பாரா வாலிபால் சங்கக்கூட்டத்தில் பேசுகிறார் மாநிலத்தலைவர் மக்கள் ஜி. ராஜன்

ஈரோட்டில் ஆகஸ்ட் மாதம் அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டிகள் நடைபெறுவுள்ளதாக தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநிலத்தலைவர் மக்கள் ஜி. ராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அதன் மாநில தலைவர் டாக்டர் மக்கள் ஜி. ராஜன் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது.

சென்னிமலை ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவரும், உணர்வுகள் அமைப்பின் நிறுவன தலைவருமான டாக்டர் மக்கள் ஜி ராஜன்  மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கத்தின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாரா வாலிபால் சங்கத்திற்கு கீழ் பாரா சிட்டிங் வாலிபால், பாரா பீச் வாலிபால், பாரா ஸ்டாண்டிங் வாலிபால் ஆகிய போட்டிகளை நடத்திய இவர் தற்பொழுது தமிழ்நாடு ஹேண்ட் பால் கழகத்தின் மாநில துணைத்தலைவராகவும், ஈரோடு மாவட்ட தலைவராகவும் மேலும் வீல் சேர் பேஸ்கட் பால் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

இந்தச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன் தலைமையில்  ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள துளிப் ஹோட்டலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அகில இந்திய பாரா வாலிபால் சங்கத்தின் தலைவரும், ஆசிய உலக பாரா வாலிபால் சங்கத்தின் சேர்மேனுமான டாக்டர் உச்சப்பா சந்திரசேகர்  கலந்து கொண்டு நிர்வாகிகள் நியமன கடிதத்தை வழங்கினார். பின்னர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் நடைபெறும் பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழகத்தின்  வேலூர் மாவட்டத்தைத் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த வீரமணி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

மாநிலத் தலைவர் மக்கள் ராஜன் பேசுகையில்,  வருகிற ஆகஸ்ட் மாதம் ஆண்கள் 17 மாநில அணிகளும் பெண்கள் 9 மாநில அணிகளும் கலந்து கொள்ளும் அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி ஈரோட்டில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக இரண்டு வீரர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்  ராஜாவை கீழ்க்கண்ட தொலைபேசியில் 9842796487 தொடர்பு கொண்டு உதவி செய்யலாம் எனவும் குறிப்பிட்டார்.

புதிய நிர்வாகிகள்: இந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக ராஜா,  மாநில பொருளாளராக திருச்செங்கோடு எஸ் பி கே பள்ளி தாளாளர் எஸ் பிரபு ஆகியோரும், மாநில துணைத்தலைவராக பெருந்துறை சக்கரவர்த்தி பிளாஸ்டிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருள்ச்செல்வன், மாநில துணைச் செயலாளராக சென்னிமலை குமரேஷ்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, 21 மாவட்டங்களில் இருந்து வருகை தந்த நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஹேண்ட்பால் கழகத்தின் பொதுச்செயலாளர் ராகவன் மற்றும் அகில இந்திய வாலிபால் போட்டியாளர் ஜாபர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top