Close
நவம்பர் 22, 2024 3:58 காலை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை

கறம்பக்குடி ஒன்றியத்திற்குள்பட்ட பள்ளிகளில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் ஆகஸ்ட் 20 முதல் 27 வரை நடத்தப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, கறம்பக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பஞ்சவர்ணம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், முள்ளங்குறிச்சிஅரசு ஆதிராவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, பிலாவிடுதி அரசு ஆதிராவிடர் நல உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிங்காரவேல், அரசு உயர்நிலைப்பள்ளி பல்லவராயன்பத்தை தலைமை ஆசிரியர் வீரமுத்து ஆகியோரது தலைமையிலும் நடைபெற்றது.

தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் உறுதி மொழியும் மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கான பதிவேடுகளில் ஆசிரியர்களும் மாணவர்களும்
பெற்றோர்களும் முன் வந்து கையொப்பமிட்டு நட்டில் மூட நம்பிக்கையற்ற நிலை உருவாக வேண்டுமென கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அறிவியல் இயக்க பதாகையில் 5 பள்ளிகள் உள்ள மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கையொப்பமிட்டனர்.

நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய செயலாளர் சாமியப்பன் அனைத்து பள்ளிகளிலும் மூட நம்பிக்கை எதிரான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் அனைத்துப் பள்ளிகளிலும் மூட நம்பிக்கைக்கு எதிரான அறிவியல் பிரசாரத்தை ஒவ்வொருவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக பிரசாரம் செய்ததோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சிவானந்தம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top