Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சுற்றுலா தின ஓவியப்போட்டி

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் இல்லம்தேடி கல்வி திட்ட மைத்தில் உலக சுற்றுலா தினம் குறித்து பேசிய ஒன்றிய இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா

கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சுற்றுலா தின ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆலோசனையின் படியும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது.

 மங்கனூர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஒவிய போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மாணவர்கள் சுற்றுலா தலங்கள் குறித்த ஓவியங்களை வரைந்தனர்.

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா உலக சுற்றுலா தினம் குறித்து பேசியதாவது

உலக சுற்றுலா நாள் உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27 -ஆம் நாள் 1980 -ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979 -இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டது.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக் காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத் துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப் பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள்: 2022 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம் 42 -ஆவது ஆண்டாக கொண்டாடப்படும் நிலையில், இந்தோனேசியாவின் பாலி நகரில் இந்த விழாவின் அதிகாரப்பூர்வ விழா நடைபெற உள்ளது. 2022 உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் ‘சுற்றுலாவை மறுபரிசீலனை செய்தல்‘ என்பதாகும்.

கோவிட்-19 வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலும், சுற்றுலாவை மறுபரிசீலனை செய்வதிலும், வளம்பெற செய்வதிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.
மேலும் மாணவர்கள் புதுக்கோட்டையை சுற்றியுள்ள சித்தன்னவாசல் ஓவியம், திருமயம் கோட்டை, அருங்காட்சி யகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பெற்றோருடன் சென்று பார்வையிட்டு வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முன் வர வேண்டும் என்றார் அவர்.

இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் வெள்ளையம்மாள், பவித்ரா லெட்சுமி, அஞ்சலி, கனகா, திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top