Close
நவம்பர் 21, 2024 6:29 மணி

சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு

சென்னை

சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு

சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் புதன்கிழமை பொறுப்பேற்றார்.

இது குறித்து சென்னை சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சரக்கு மற்றும் சேவை வரி முதன்மை ஆணையராக இருந்து வரும் மாண்டலிகா ஸ்ரீனிவாஸ் சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் பொறுப்பையும் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கூடுதலாகக் கவனித்து வந்தார்.

இந்நிலையில் சென்னை மண்டல சுங்கத் துறை புதிய தலைமை ஆணையராக  டாக்டர் ராம் நிவாஸ் நியமிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமை தனது பொறுப்பை முறைப்படி ஏற்றுக் கொண்டார்.

1990-ம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வருவாய் பிரிவு அதிகாரியாக பொறுப்பேற்ற டாக்டர் ராம் நிவாஸ் சரக்கு சேவை வரி, சுங்கத்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்டவைகளில் திறம்பட செயலாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுங்கத் துறையில் வெளிப்படைத் தன்மை, வர்த்தகம் செய்வதில் எளிமையான நடைமுறை உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என டாக்டர் ராம் நிவாஸ் தெரிவித்துள்ளார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top