Close
டிசம்பர் 3, 2024 6:57 மணி

கந்தர்வகோட்டையில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் மாணவர்கள் அசத்தல்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்

கந்தர்வகோட்டையில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு நடைபெற்றது. வண்ணத்துப்பூச்சி வடிவில் அமர்ந்து புத்தகங்களை வாசித்து அசத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாள விடுதியும் நடத்திய 6 -வது புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் வாசகர்கள் மாணவர்கள் இளைஞர்கள் போட்டித் தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் ஆகியோர் புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்வு கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அனைத்து அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாள விடுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் துரையரசன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும் ,அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாள விடுதி பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முத்துக்குமார் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டார தலைவர் ரகமத்துல்லா  வரவேற்றார் .

சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வினை குறித்தும் வாசிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பேசினார்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சரவணமூர்த்தி, ஜஸ்டின் திரவியம், சத்தியபாமா, அம்பிகை ராஜேஸ்வரி, இளநிலை உதவியாளர் கணேசன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெறுகிறது.

புத்தகத் திருவிழாவில் 100 -க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில் 50 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறும், புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுவதன் நோக்கம் அனைவரும் வாசிக்க வேண்டும்.

வாசிப்பு பழக்கம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம், வாழ்வில் வெற்றி பெற வாசிப்பு அவசியம் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு பாட புத்தகங்களை தாண்டி பொது புத்தகங்களை வாசிக்க வேண்டும் அதற்கு புத்தகத்தில் உள்ள துணையாக அமையும்.

மாணவர்கள் அனைவரும் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமர்ந்து பல்வேறு தலைப்புகளில் உள்ள புத்தகங்களை வாசித்து பயன் பெற்றனர்.இதுபோல கந்தர்வகோட்டை முழுவதும் 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் வாசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top