Close
நவம்பர் 22, 2024 7:05 காலை

2024 ஜனவரி 1 ஆம் தேதி தமிழக முழுவதும் கள் இறக்கும் போராட்டம்: நல்லசாமி அறிவிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான நல்லசாமி

வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதி தமிழக முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என்றார் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான நல்லசாமி.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
வரும் 2024 ஜனவரி 1 -ஆம் தேதி தமிழக முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும். இதுவரை 16 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இதே கோரிக்கையை வைத்துப் போராடிய போது எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கவில்லை. இந்த முறை சில அரசியல் கட்சிகள் ஆதரிக்கவுள்ளனர்.
கள் ஒரு போதைப் பொருள் என்று அரசியல் கட்சியினர் நேருக்கு நேர் விவாதம் செய்து, நிரூபித்துவிட்டால் ரூ. 10 கோடி பரிசு தரத் தயாராக இருக்கிறோம்.கள் என்பது உணவின் ஒரு பகுதி. கள் பானம்  குறித்த புரிதல் இல்லை,
காவேரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையற்ற இலவசத் திட்டங்களை நிறுத்திவிட்டு, காவேரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அந்த நிதியை பயன்படுத்த வேண்டும்.
2024 -ஆம் ஆண்டு சூப்பர் எல்நினோ- பெரிய பருவநிலை மாற்றம் வரவுள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமல்ல உலகமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறது. மழை பெய்ய வேண்டிய இடத்தில் மழை பெய்யாது, பெய்யக் கூடாத இடத்தில் மழை பெய்யும். இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட போகிறது.
வெள்ளம், வறட்சி இரண்டும் இருக்கும். உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். இயற்கையை நாம் பகைத்துக் கொண்டோம். அதனுடைய வெளிப்பாடுதான் இது. இயற்கையைப் பகைத் துக் கொண்டால் அழிவுதான் முடிவு.
வெங்காயம் விலை ஏற்றம் நான்கு மாநில ஆட்சியை மாற்றிக் காட்டியது. ஆனால் வெங்காய விலை வீழ்ச்சி எந்த மாற்றத் தையும் ஏற்படுத்தாது. விவசாயியைக் கடுமையாகப் பாதிக் கும்.
தக்காளி, மஞ்சள், வெங்காயம் ஆகியவற்றின் விலை ஏற்றம் மற்றும் விலை வீழ்ச்சிக்கு அரசுகள்தான் காரணம். சரியான திட்டமிடல் இல்லாது விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு கொடுக்காததும், எது, எந்தக் காலத்தில் தேவை என்பதை விவசாயிகளுக்கு முறையாக அறிவிக்காததும்தான் காரணம்.
என்றார் நல்லசாமி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top