Close
நவம்பர் 22, 2024 2:17 மணி

சாதி,சமய வேறுபாடுகளுக்கு எதிராக சமதர்ம போராட்டத்தை முன்னெடுத்தவர் வள்ளலார்

தஞ்சாவூர்

வள்ளலாரின் 200 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்றது

சாதி,சமய வேறுபாடுகளுக்கு எதிராக சமதர்ம போராட்டத்தை முன்னெடுத்த வள்ளலார் 200 -ஆவது பிறந்த நாள் விழா  மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் தஞ்சையில்  நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சைவ, வைணவ மதங்கள் ஓங்கி இருந்த காலத்தில் மக்களிடையே மிகப்பெரிய சாதிய பிளவுகளும், தீண்டாமை கொடுமைகளும் இருந்த காலத்தில் சைவ , வைணவ மதங்களால் இக் கொடுமைகளை ஒழிக்க முடியாது.

மாற்றாக அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று சமதர்ம சன்மார்க்க நெறிகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் வள்ளலார். சாதி சமய வேறுபாடுகளை அறவே வெறுத்து, வேத புராண, இதிகாசப் பொய்களையும், சனாதனச் சடங்குகளையும் அம்பலமாக்கியவர்.

தமிழகத்தின் பெருமை மிகு பிராமண எதிர்ப்பு மரபை மூடி மறைத்து வள்ளலாரையும், வள்ளுவரையும்  இந்து மத சகதியில் தள்ள ஆர் எஸ் எஸ் ,பாஜக  முயற்சிக்கிறது  .தமிழ்நாடு ஆளுநர்‌‌ ஆர்.என்.ரவி ஒருபடி மேலே போய் சாதனத்தின் பத்தாயிரம் ஆண்டு பெருமை வள்ளலார் என்று சமரச சன்மார்க்க நெறிகளை ஆணித்தரமாக பரப்பிவந்த வள்ளலாரை கொச்சைப்படுத்தி வள்ளலார் பெயருக்கு களங்கத்தை கற்பித்து வருகிறார்.

 சக மனிதர்களையே இஸ்லாமியர், கிறிஸ்தவர், தாழ்த்தப் பட்டோர்,. தீண்டத் தகாதவர் என பிரித்து அவர்களை அடக்கி அவமானப்படுத்தி, கொல்லுவதையே கொள்கையாக செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தை  காவிமயமாக்க துடிக்கும் இவர்களை வீழ்த்தி விரட்டி அடிக்க வள்ளலார் வகுத்து தந்த சமதர்ம சன்மார்க்க நெறிகளை நாம் உயர்த்த பிடிக்க வேண்டும்.

அடிப்படையில் சாதி, மதமே இல்லாத மனித நேயத்தை வலியுறுத்துகின்ற ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபட்ட வள்ளலாரின் 200 -ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில்  தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் காளியப்பன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சாம்பான்  வரவேற்றார். அரசியல் சமூக ஆய்வாளர் தமிழ் காமராசன் சிறப்புரையாற்றினார்‌.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலாளர் கோவன், புதுக்கோட்டை சன்மார்க்க நெறியாளர் மு வேதரத்தனம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

முன்னதாக திருபுவனம் ஜி. ஆத்மநாதன் குழுவினருடைய வள்ளலார் அருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச்செயலாளர்  ராவணன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top