Close
நவம்பர் 22, 2024 2:09 மணி

டாஸ்மாக் கடை அகற்ற கோரி தாலி கயிறுடன் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் போராட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சம்மேளத்தினர்

டாஸ்மாக் கடை அகற்ற கோரி தாலி கயிறுடன் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை அருகில் புளியக்குடி மேலதோப்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையால் தொடர்ந்து விபத்துகளும், உயிரிழப்புகளும், ஏற்பட்டு வருவதுடன் அந்த சாலையில் சென்று வரும் மாணவர், மாணவியர்கள், பெண்கள் கேலி கிண்டலுக்கு உள்ளாவதுடன் இளைஞர்கள் குடிக்கு அடிமையாகி இளம் விதவைகள் உருவாகி வருகின்றனர்.

உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பாக மாவட்ட தலைவர் பி. தாமரைச்செல்வி தலைமையில் கையில் தாலி கயிறுகளை கையில் ஏந்தி நூதன போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திங்கள்கிழமை  நடைபெற்றது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம்  டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு அளித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top