Close
மே 10, 2024 2:11 மணி

திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்கும் சென்னை பெண்

இந்தியா

திருமதி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் பெண் ப்ளாரன்ஸ் ஹெலன் நளினி

திருமதி உலக அழகிய போட்டியில் இந்தியா சார்பில் முதன்முதலில் சென்னையிலிருந்து பங்கேற்கும் சாதனைப்பெண்

திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த மனோ தத்துவ மருத்துவர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருவெற்றியூரில் செய்தியாளர்கள்  கூட்டத்தில் அவர் பேசியதாவது:

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் இந்த மாதம் நடைபெறவுள்ள திருமதி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலாக கலந்து கொள்வது பெருமை அளிக்கிறது.

திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும்.இதில் 70க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தப்போட்டி ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை 22 வரை நடைபெறும் நிலையில், அதில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்பதாக கூறினார்

55 வயது உடையவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் திருமணம் ஆகி இருந்தாலும் திருமணமாகி ஆறு மாதங்க ளாகி இருக்க வேண்டும் குறிப்பாக கணவனுடன் வாழ்ந்திருக்க வேண்டும்

திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்கள் பங்கேற்க முடியாது திருமணம் ஆகி கணவருடன் இருந்தால் மட்டுமே இது பங்கேற்க முடியும் என்று தெரிவித்தார்

கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் லாக் டவுன் சமயத்தில் அனைத்தும் ஆன்லைனில் பதிவு பதிவு செய்ததாக கூறினார் கொரோனா பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் திருமதி உலக அழகி போட்டி நடப்பதாக மருத்துவரான எனது மகள் தான் பதிவு செய்ததாக கூறினார்

உலக அழகி போட்டியில் பங்கேற்பதற்காக 6500 பேர் பதிவு செய்து இருந்ததாகவும் அதில் 52 பேரை தேர்வு செய்ததில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டிலிருந்து ஒரு பெண்ணாக நான் செல்வது பெருமிதமாக  இருக்கிறது.

இந்த போட்டி பல சுற்றுகளாக நடைபெறும். இதில் விளையாட்டான சுற்றுகளும் உண்டு. தீவிரமான சுற்றுக்களும் உண்டு. தீவிரச் சுற்றுகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் இருக்கின்றன.இதில் உடற்தகுதிச் சுற்று, தனிநபர் நேர்காணல் சுற்று, ஈவினிங் கவுன் சுற்று என்று மூன்று நடைபெறும்.

உடற் தகுதிச் சுற்று நம் உடல் பராமரிப்பு, தன்நம்பிக்கை மனத் திடம் ஆகியவை பார்க்கப்படும். இதற்கு 25% மதிப்பெண்கள் அளிக்கப்படுவதாகவும், அடுத்ததாக தனிநபர் நேர்காணல் சுற்று நடக்கும். இதில் 5 நீதிபதிகள் இருப்பர். 5 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 5 நிமிடங்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். இதற்கு 50% மதிப்பெண்கள் உண்டு.

அடுத்ததாக ஈவினிங் கவுன் சுற்று எனப்படும் ஆடை அலங்காரச் சுற்று. இதில் பெண்கள் தங்களுடைய கணவருடன் பங்கேற்க வேண்டும். இதில் ஒரு கணவன் பெண்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை காட்டும் சுற்று.இதைத்தவிர பாத் வார்ம் மேக்கிங், சோப் மேக்கிங், பேஸ்பால், வைன் இன் வெட்ஜெஸ் என்கிற ஜாலியான சுற்றுக்களும் உண்டு.

இதற்கு மதிப்பெண்கள் கிடையாது.மேலே கூறிய தீவிரமான சுற்றுக்களில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்படுவர்.அவர்கள் 16 பேரும் சமூக பிரச்னைகள் குறித்த கருத்துக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தச் சமூக பிரச்சனைகள் பற்றியும், அதை மாற்றுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் 30 நொடிகளில் பேச வேண்டும்.

பிறகு அவர்கள் அதில் இருந்து கேள்வி எழுப்புவார்கள். அந்தக் கேள்விகளுக்கு 30 நொடிகளில் நாம் பதில் சொல்ல வேண்டும். குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி உரிமை ஆகிய சமூக பிரச்சனைகளை தேர்ந்தெடுத்து பேச இருக்கிறேன்.

இந்தச் சுற்றின் இறுதியில் 5 பேரை தேர்வு செய்யப்படுவார் கள். அவர்களுக்கு இறுதி போட்டிகள் நடைபெறும்.இந்தப் போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறுவதற்காக தனித்தனியாக கடும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். இதுகுறித்து வெற்றி வேண்டும் என்றால் வலியை அனுபவிக்க வேண்டும் என்றார் புளோரன்ஸ் ஹெலன் நளினி.

இவரைப் பற்றி... இந்தப் போட்டிகளுக்காக உடல் பராமரிப்பை மேற்கொண்டு வரும் அவர், தினமும் உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, தியானம் ஆகியவற்றை மேற்கொள்கிறார்.

புளோரன்ஸ் ஹெலன் நளினி இதுவரை நிறைய பட்டங்களை வாங்கியுள்ளார். இன்றும் தொடர்ந்து கற்று வருவதாக கூறும் அவர், இளநிலை பட்டமாக லைஃப் சயின்ஸ், முதுநிலை பட்டமாக பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷன், எம்பிஏ மார்க்கெட்டிங் அண்ட் ஹெச்.ஆர், எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளார்.

இதைத் தவிர பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷனில் முனைவர் பட்டம், உளவியலில் முதுநிலை முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

உளவியலில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வாங்கி இருக்கும் அவர், லைப் ஸ்கில் பயிற்சியாளர், யோகா பயிற்சியாளர், ஹோல்னஸ் அன்ட் வெல்னஸ் அமைப்பின் பயிற்சியாளர் எனப் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இவர் குழந்தை கல்வியில் உதவி செய்ய வேண்டும் அதுவே தன் லட்சியம் என்றும்,  இந்தியா கல்வி தரத்தில் மிகச் சிறந்த நாடாக இருக்க வேண்டும் என்றும், இந்தியாவில் பிறக்கும் அனைவரும் பட்டதாரியாக வேண்டும் என்பதே தனது லட்சியம்.

அதேபோல பெண்களை சாதனையாளர்களாக மாற்றுவதற் காகப் போராடி வருகிறார்.இன்று அனைவருக்கும் கல்வி வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்த போராடி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top