Close
நவம்பர் 22, 2024 7:05 காலை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்: ஆட்சியம் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்விண்ணப்பங் கள் பதிவு செய்யும் முகாம்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000ஃ- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை, புதுக்கோட்டை தர்மராஜபிள்ளை நகராட்சி தொடக்கப்பள்ளி

மற்றும் புதுக்கோட்டை நகராட்சி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் உசிலங்குளம், பேரறிஞர் அண்ணா நினைவு தொடக்கப்பள்ளி களில், ஆட்சியரி மெர்சி ரம்யா (24.07.2023) நேரில் பார்வை யிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் ஆட்சியர்  தெரிவித்ததாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் திங்கள்கிழமை  தொடக்கி வைத்துள்ளார்.

அதன்படி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் – பேரறிஞர்  அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாளில்  முதலமைச்சர்  தொடங்கி வைக்கிறார்.

அதனடிப்படையில், தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாம் முதல்கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார். மேலும் இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும்.

இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 04322-295022 என்ற தொலைபேசி எண்ணிலும், 94450 45622 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்  ஆட்சியர் மெர்சி ரம்யா .

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் .மா.செல்வி, வட்டாட்சியர் .விஜயலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top