Close
மே 20, 2024 5:41 மணி

பாமாயில் சாகுபடி பரப்பை 50 எக்டேராக அதிகரிக்க இலக்கு

புதுக்கோட்டை

பாமாயில் மரப்பயிரை 50 எக்டேரில் பயிரிட இலக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 22.00 எக்டர் பரப்பளவில் எண்ணெய் பனை (பாமாயில்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் பனை திட்டமானது கோட்ரேஜ் (Godrej ) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எண்ணெய் பனை பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு நடப்பு ஆண்டில் 50 எக்டர் பரப்பளவில் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. எண்ணெய் பனை திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப் பட்டுள்ள வயல்களில் மாபெரும் எண்ணெய் பனை நடவு விழா (Mega Drive) மூலம் நடவுப்பணி ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைப்பெறவுள்ளது.

எண்ணெய் பனை நடவு செய்து மூன்று முதல் நான்கு வருடங்களில் பழங்கள் அறுவடைக்கு வந்துவிடும். எக்டேர் ஒன்றுக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் பெறலாம். டன் ஒன்றுக்கு ரூபாய் 12000- முதல் 13000 – வரை கோட்ரேஜ் (Godrej ) நிறுவனத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப் படுகிறது.

இதனால் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படாது. எனவே, தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

தற்போது நடைபெற உள்ள இந்த மாபெரும் நடவு விழாவில் பயனடைய விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு எண்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளித்திடவும், தோட்டக்கலைத் துறை இணையதளமான www.tnhorticulture.tn.gov.in  என்ற இணையத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top