நமது இளைஞர்கள் சீக்கிரம் இறந்துபோவதற்கு முக்கிய காரணங்களிலொன்று, அந்நிய பாஷையிலேயே எல்லா விஷயங்களையும் படித்து, வெகு கடினமான பரிஷைகளில் தேறும்படியேற்பட்டிருப்பதே யாகுமென்று காலஞ்சென்ற மகரிஷி ரானடே சித்தாந்தம் செய்திருக்கிறார்.
அந்நிய ராஜாங்கமாக இருப்பதால் இங்கிலிஷ் பாஷையி லேயே நம்மவர் தேர்ச்சி பெற வேண்டுமென்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் பூலோக சாஸ்திரம், உலக சாஸ்திரம், ரசாயனம், வானசாஸ்திரம், கணிதம் என்பவற்றைச் சுதேச பாஷையிலேயே கற்றறிந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இதனால் இளைஞர்களுக்குச் சிரமம் குறையும், சுயத் தன்மையும் ஏற்படும். (இந்தியா: 18.8.1906 பக்.5) பக்.45.இப்படி இன்னும் பல பாரதியின் கல்விச் சிந்தனைகளை இந்தகல்விச் சிந்தனைகள் பாரதியார்” நூலில் இலங்கையைச் சேர்ந்த கலாநிதி ந. இரவீந்திரன் தொகுத்திருக்கிறார்.
பாரதியார், சக்கரவர்த்தினி, இந்தியா, சுதேசமித்திரன், விஜயா பத்திரிகைகளில், எழுதிய கல்வி தொடர்பான பாரதியின் சிந்தனைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளது.
தாய்மொழியின் அவசியம், இலவச அடிப்படைக்கல்வி, பெண்கல்வி, தமிழ்மொழியில் உள்ள குறைபாடுகள், இந்தியக் கல்வி முறையில் உள்ள இடற்பாடுகள், உடற்கல்வியின் அவசியம் என்று இந்தியச் சமூகம் முழுமையான கல்வி பெறுவதற்காக பாரதி சொன்ன கருத்துகள் யாவும் இந்நூலில் அழகாக 48 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த நூலை இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்துபாரதி புத்தகாலய புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
#பேராசிரியர் விஸ்வநாதன்- வாசகர் பேரவை-புதுக்கோட்டை #