சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவகம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இளைஞர் திருவிழா- 2023-24 ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விரிவான அறிவை மேம்படுத்தி டவும், இளம்பருவ ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டியும் கல்லூரி மாணவர்களுக்கு குறும்படம். நாடகம், மாரத்தான் போட்டிகளை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு “மாரத்தான் – Red Run (5 km – வயது 17-25)” 30.08.2023-ம் தேதியன்று காலை 7. மணியளவில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் முதல் தென்னகப்பண்பாட்டு மையம் வரை நடைபெறுகிறது.
மாரத்தானில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பட்டியலை கல்லூரியின் சார்பாக dapcuthanjavur2023@gmail.com என்ற மின்னஞ்சல் செய்துகொள்ளவும். மற்றும் தொலைபேசி 9659654996 -யில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மாரத்தானில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு – ரூ.10,000/-ம், இரண்டாம் பரிசு – ரூ.7000/-ம்,மூன்றாம் பரிசு – ரூ.5000/-ம் என ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என தனித்தனியாகவும் மற்றும் ஆறுதல் பரிசாக 7 நபர்களுக்கு தலா ரூ.1000/-ம் வழங்கப்படும்.
மேலும் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். தஞ்சாவூர் மாவட்ட கல்லூரி மாணவ / மாணவிகள்மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.