Close
நவம்பர் 22, 2024 12:18 காலை

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள உயர்துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை தொடக்கி வைத்த நகர்மன்றகத்தலைவர் திலகவதிசெந்தில், துணைத்தல்வர் எம். லியாகத்அலி

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கமாக இந்தியாவிலேயே முதல் முறையாக31,000 அரசுப் பள்ளிகள் 17 இலட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  நாகை மாவட்டம், திருக்குவளையில் இன்று  தொடக்கி வைத்தார்.

அதனைத் ன்படி, புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை நகர்மன்ற தலைவர்  திலகவதி செந்தில்  தொடக்கி வைத்தார்.

நிகழ்வில் நகர்மன்ற துணை தலைவர்  எம். லியாகத் அலி, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராகிம், நகராட்சி இணை பொறியாளர்  கலியகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு,அனுராதா அறிவுடைநம்பி,  காதர் கனி, ஜாகிர் உசேன்,  கனகம்மன் பாபு, பழனிவேல், நகர அமைப்பு அலுவலர்  விஜயராகவன், வருவாய் ஆய்வாளர் பாசித்.

நகர அவைத் தலைவர் ரத்தினம், நகரத் துணைச் செயலாளர் ரெங்கராஜ், மணிவேலன், வட்டச் செயலாளர் என்.கே.அறிவுடைநம்பி, ராமச்சந்திரன், குமார்,  இளங்கோ, மா. ரவி, பிரபு கேண்டின் பன்னீர்,  தனபால், அர்பன் சீனிவாசன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஞானவேல்,  தினேஷ், , தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top