Close
அக்டோபர் 5, 2024 7:09 மணி

மக்கள் ஒற்றுமை மேடைசார்பில் காந்தி ஜயந்தி விழா

புதுக்கோட்டை

காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை

மகாத்மா காந்தியின் 154-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதோடு மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஏ.சந்திரசேகரன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.அசோசன், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், காங்கிரஸ் நகரத் தலைவர் இப்ராஹிம்பாபு, முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் அஸ்ரப்அலி, திலகவதியார் ஆதீனம் தயானந்த சந்திரசேகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன், வாசகர்  பேரவை செயலாளர் பேரா.விஸ்வநாதன், அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.சின்னதுரை பங்கேற்பு

கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல், கே.சித்திரைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலங்குடியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், நகரச் செயலளார் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் நகரத் தலைவர் சக்திவேல், தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் ரமா.ராமநாதன், கிளைத் தலைவர் எஸ்.முருகேசன், நேசன் மகதி, வாசகர் வட்டத் தலைவர் பாபுஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கறம்பக்குடியில் எவரெஸ்ட் சுரே~; தலைமையில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஞானசேகரன், வியாபரிகள் சங்கத் தலைவர் சாந்திய மூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், இணைச் செயலாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top