Close
ஏப்ரல் 4, 2025 11:43 காலை

சன்மார்க்க தர்ம சாலையில் ஏழைகளுக்கு உணவளிக்கும் பெண்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரில் பல்லவன் குளக்கரைஅருகில்  வள்ளலார் தர்ம சாலையில் தினமும் உணவளிக்கும் பெண்கள்

உலக சைவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளம் அருகில் உள்ள சன்மார்க்க தர்ம சாலையில் சைவ உணவுகளை  வழங்கினர்.

புதுக்கோட்டை நகரில் பல்லவன் குளக்கரை அருகில் வள்ளலார் தர்ம சாலையிலே தொடர்ச்சியாக 36 வருஷமாக   காலையில் கஞ்சியும் மதியம் அன்னதானமும் வழங்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பெரியநாயகி, முத்துலட்சுமி ஆகிய இரு பெண்கள்  இந்த அறப்பணிகளை செய்து வருகின்றனர்.

இது குறித்து இருவரும் கூறியதாவது:  எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய அருட்கருணையினாலே இந்த தொண்டு தொடர்ச்சியாக செய்து வருகின்றனர் உலக சைவ தினத்தை முன்னிட்டு அறுசுவை உணவாக  வழங்கினர்.

சைவ உணவுகளை முதியோர்கள் மற்றும் ஏழைத் தாய் மார்கள் பசியாறுகின்றனர்.  இந்த பணிகளை பல்வேறு சமூக ஆர்வலர்கள் மருத்துவர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.

இந்த தர்மசாலை எப்போதுமே தொடர்ச்சியாக நடைபெறு வதற்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய கருணை பரிபூரணமாக பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக  பெரியநாயகி ,முத்துலட்சுமி  ஆகியோர் கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top