Close
நவம்பர் 22, 2024 12:21 காலை

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்… பள்ளியில் கருத்தரங்கம்.

புதுக்கோட்டை

அண்டனூர் நடுநிலைப் பள்ளியில் நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம்

அண்டனூர் நடுநிலைப் பள்ளியில் நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அண்டனூர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் பொறுப்பு பழனிச்சாமி அனைவரையும் வரவேற்றார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தரவக்கோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் என்ற தலைப்பில் பேசியதாவது:

நோபல் பரிசு உலகில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விருது களில் ஒன்றாகும், மேலும் பல இந்தியர்கள் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றுள்ளனர், இது பொதுவாக இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் ஆறு வெவ்வேறு துறைகளில் வழங்கப்படுகிறது.

ஆல்பிரட் நோபல் 1896 -ஆம் ஆண்டில் இறந்தார். அவர் தனது உயிலில் “நோபல் பரிசுகள்” என்று பெயரிடப்பட்ட பரிசுகளை நிறுவுவதற்குப் பயன்படுத்த தனது சொத்தை பயன்படுத்த வேண்டும் என எழுதி இருந்தார்.

அதன்படி வழங்கப்பட்டது. 1901 முதல் தற்போது வரை நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் ரவீந்திரநாத்தாகூர்- இலக்கியம் சி.வி.ராமன்-இயற்பியல் , ஹர்கோவிந்த்- கொரானா மருந்து,
அன்னை தெரசா- சமாதானம்,

சுப்ரமணியன்சந்திரசேகர்- இயற்பியல் ,  அமர்த்தியாசென்- பொருளாதாரம் , வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன்- வேதியியல், கைலாஷ் சத்யார்த்தி – சமாதானம், அபிஜித் பானர்ஜி- பொருளாதாரம் உள்ளிட்டோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்றார் அவர்.

இந்நிகழ்வில் தற்காலிக ஆசிரியர் பால்சாந்தி, இல்லம் தேடிக் கல்வி மைய கல்வி மையத் தன்னார்வலர்கள் காந்திமதி, அபிராமி, வசந்தி  நிறைவாக ஆசிரியை செந்தில் குமாரி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top