Close
ஜூலை 4, 2024 5:00 மணி

கடல் பசுவைக்காப்பாற்றிய மீனவர்களுக்கு பாராட்டுச்சான்று

தஞ்சாவூர்

கடல்பசுவை காப்பாற்றியதற்காக சான்றிதழ் ஊக்கத்தொகைய மீனவர்களுக்கு வழங்குகிறார், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்

அறிய கடல் வாழ் பாலூட்டி வகை உயிரினமான கடற் பசுவை காப்பாற்றி உடன் சேர்த்து உயிர் வாழ வைத்த மீனவர்களைப் பாராட்டி  தமிழ்நாடு வனத்துறை சார்பில்    சான்றிதழ் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம்,  சேதுபாவா சத்திரம் ஒன்றியம், புதுப்பட்டினம் கிராமத்தினை சேர்ந்த மீனவர்களின் கரை வலையில் 28.11.2023 அன்று பிடிபட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினம் கடல் பசுவை மீண்டும் கடலில் உயிருடன் விட்ட 12  மீனவர்களுக்கு மாவட்ட வனத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்ற நிகழ்வில்  பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

இதில்,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் .அகில் தம்பி , மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிய வகையான கடல் பசு இனத்தை மற்றும் அதன் வாழ்வையே வாழ்விடங்களை பாதுகாக்கும் பொருட்டு மன்னார் வளைகுடா பாக்விரிகுடா பகுதியில் கடற் பசு பாதுகாப்பாக அமைக்கப்படும் என்று தமிழக அரசால் 2021 -ஆம் ஆண்டு செப்டம்பர் 3 -ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில் 448 கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்க ளில் கடலோர பகுதிகளில் உள்ளடக்கிய விரிகுடா பகுதியில் கடல் பசு பாதுகாப்பாக அறிவித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை 21ஆம் தேதி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாக்விரிகுடாவில் அதனை ஒட்டி உள்ள கடலோடு மக்கள் கடல் பசு பாதுகாப்பு பாதுகாப்பதன் அவசியத்தை புரிந்து கொண்டு பலமுறை மீன்பிடி வலைகளில் சிக்கிய கடற் பசுக்களை மீனவர்கள் வெற்றிகரமாக கடலில் விடுவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top