Close
ஜூன் 28, 2024 7:07 காலை

இயற்கை ஆர்வலர்களின் இதயத்தில் பூத்த மற்றுமொரு மலர்… பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு..!

புதுக்கோட்டை

பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடக்கவிழாவில் பேசிய ஒருங்கிணைப்பாளர் சா.விஸ்வநாதன்

புதுக்கோட்டையிலுள்ள இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை நகர் மற்றும் பிற இடங்களில் பழமையான, பசுமையான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் மர அழிப்பு தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வந்தாலும், மாவட்ட நிர்வாகமோ அல்லது நகராட்சி நிர்வாகமோ இவைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.

இந்தநிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், மரங்கள் வெட்டமாடாமல் பாதுகாக்கும் நோக்கிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்கள் இணைந்து “பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு “என்ற அமைப்பினை தொடங்குவது என்று புதுக்கோட்டை” மரம் நண்பர்கள்” ஏற்பாடு செய்திருந்த ஆலோனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சிச் சந்தித்து, மரங்களை வெட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மரங்கள் வெட்டப்படாமலிருக்க மக்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்று முறையிடுவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜி.எட்வின் தலைமை வகித்து ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கங்களை எடுத்துக் கூறினார்.

மரம் நண்பர்களின் செயலர் ப. கண்ணன்(எ) ராதா கிருஷ்ணன் வருகை தந்த இயற்கை ஆர்வலர்கள் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக பொறியாளர் ரியாஸ் கான் நிறைவாக நன்றி கூறினார். பேராசிரியர் சா.விஸ்வநாதன் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார்.

புதிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக பேரா.சா.விஸ்வநாதன், ஜி.எஸ். தனபதி, மரம் தங்க கண்ணன், பசுமை தேசம் சதிஷ்குமார், ராஜசேகர் ,விதைக்கலாம் பாலாஜி, ஆத்மநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். . இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20 இயற்கை ஆர்வலர்கள் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top