Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

தஞ்சையில் முதல்வன் திட்ட நிரல் திருவிழா மாணவர் வழி நடத்துனர்களுக்கு ஒருநாள் பயிற்சி

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், (EDII-TN) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகமும் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், (EDII-TN) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா மாணவர்  வழி  நடத்துனர்களுக்கான ஒருநாள் பயிற்சி மாவட்ட வருவாய் அலுவல .தெ.தியாகராஜன் தலைமையில் இன்று (13.12.2023) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், (EDII-TN) தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகமும்இணைந்து நான்முதல்வன் திட்டத்தின்கீழ் நிரல் திருவிழா மாணவர் வழி நடத்துனர்களுக்கான ஒரு நாள் பயிற்சியைத் தொடக்கி வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் பேசியதாவது:

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மும், (EDII-TN) தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகமும் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா என்கிற ஹேக்கத்தான் போட்டி நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது.

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில், அவர்கள் படிக்கிற காலத்திலேயே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதல் சிந்தனையினை தூண்டும் நோக்கத்துடன் இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் புத்தாக்க முறையில் (Innovation) புதிய சந்தைப்படுத்தக் கூடிய பொருட்களை உருவாக்குவார்கள்.

இந்த நிரல் திருவிழா ஹேக்கத்தான் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், மீன்வளக் கல்லூரிகள், பல் தொழில் நுட்ப கல்லூரிகள் (polytechnics) மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் (ITIs), போன்ற கல்லூரிகளில் பயிலும் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியரகங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள்,  தொழில் நிறுவனபிரதிநிதிகள் உட்படபலர் கலந்து கொண்ட பிரச்னைகள் கண்டறியும் கருத்துப்பட்டறை நவம்பர் மாதம் 7 ம் தேதி முதல் 14 வரை நடத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு முழுவதும் 2576 பிரச்னைகள் கண்டறியப் பட்டு மாணவர்களுக்கு புத்தாக்கத்தின் மூலம் இதற்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முடிவு (technology driven solution) தருவதற்கு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக நிரல் திருவிழா ஹேக்கத் தான் திட்டத்தில் பங்கு பெறும் கல்வி நிறுவனங்களில் மாணவர் களை புத்தாக்கத்தின் (innovation) மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துவதற்கு வழிநடத்துவதற்கு வழி நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள் அல்லது உதவி பேராசிரியர்கள். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஒரு நாள் தீவிரபயிற்சி நடைபெற்றது.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட முதன்மைப் பயிற்றுனர் விஷால்நாயர் பயிற்சி அளித்தார்.அடுத்த கட்டமாக நிரல் திருவிழா போட்டியில் பங்கு பெறும் இந்தக் கல்வி நிறுவனங் களின் மாணவர்கள் புத்தாக்க கண்டுபிடிப்புக்கான வடிவ மைப்பு சிந்தனைகளை (designs thinking & ideas) உருவாக்கு வார்கள் என்றார் தெ.தியாகராஜன்.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 66 கல்வி நிறுவனமாணவ வழி நடத்துனர்கள் (student mentors) பங்கு பெற்று பயிற்சி பெற்றனர்.   தமிழ்நாடு  திறன் மேம்பாட்டு கழக மாவட்ட அலுவலர்கள் ராஜேந்திரன், EDII-TN நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்.அமர்நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top