Close
நவம்பர் 21, 2024 6:46 மணி

போக்குவரத்து அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம்

புதுக்கோட்டை

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் வியாழக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட தொகையை மற்ற துறைகளுக்கு வழங்குவதைப் போல அரசே வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 98 மாத பஞ்சப்படி மற்றும் இதர பணப்பலன்களை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும். வாரிசு வேலை மற்றும் இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் புதுக்கோட்டை பணிமனை முன்பாக வியாழக்கிழமை அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நடைபெற்றது.

விளக்கக் கூட்டத்திற்கு போராட்டக்குழு அமைப்பாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஏடிபி மாவட்ட உதவி செயலாளர் எஸ்.செபஸ்தியான், சிஐடியு முன்னாள் மாவட்டத் தலைவர் பெரி.குமாரவேல், ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மண்டலத் தலைவர் பி.லோகநாதன், பொதுச் செயலாளர் எஸ்.இளங்கோவன், டிடிஎஸ்எப் பொதுச் செயலாளர் எச்.ராஜசேகர், ஓய்வூதியர் சங்க  செயலாளர் பி.திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் எம்.பாலசுப்பிரமணியன், கே.ராஜேந்திரன், எம்.மாணிக்கம், பிஎல்.குழந்தைவேலு, ஜி.கெம்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top