Close
மே 13, 2024 10:33 மணி

கோபி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு கூட்டுத்தணிக்கை

ஈரோடு

கோபி நகராட்சியில் நடத்தப்பட்ட குட்கா சோதனையில் சீல் வைக்கப்பட்ட கடை

ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு கூட்டுத்தணிக்கைப்  பணி மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் சோமசுந்தரம் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை மாவட்ட புகையிலை தடுப்பு மையம் சார்பில் ஈரோடு துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் நேர்முக உதவியாளர் பொறுப்பு பி. செல்வம், மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் டாக்டர் கலைச்செல்வி, சமூக சேவகர் சங்கீதா, கோபி உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தைவேல், காவல் துணை ஆய்வாளர் ஜெகநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ரகு, சங்கர், வேலுமணி, நவீன் குமார், சேதுராமன் மற்றும் நகராட்சி சார்பில் நகர் நல அலுவலர் சோலைராஜ் மற்றும் நகராட்சி நகர நல மேற்பார்வையாளர்கள் கோபி நகராட்சிப்பகுதியில் கடைகளில் சோதனை  மேற்கொண்டனர்.

இதில் கோபி சரவனா தியேட்டர் அருகில் சுவாமிநாதன் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட பான்பராக் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட நபருக்கு பொது சுகாதார துறை மூலமாக ரூபாய்.5000 – அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறை மூலம் மேற்படி நபர் நீதிமன்ற நடவடிக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top