Close
நவம்பர் 22, 2024 12:43 காலை

சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை

சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் எம்எல்ஏ முத்துராஜா, ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில்,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும்
விழிப்புணர்வு பேரணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடிய சைத்து துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில், சேஷய்யா சாலை சந்திப்பில், தமிழ்நாடு அரசு சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற, சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் , மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில்  (13.01.2024) கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  பேசியதாவது:

பொதுமக்களின் சாலை பயணங்கள் பாதுகாப்பான முறையில் அமைய வேண்டும் என்ற அடிப்படையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் பொதுமக்களிடையே பாதுகாப்பான முறையில் சாலை பயணங்களை மேற்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவர்களை மீட்டு இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ் சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற, சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணி தொடக்கி வைக்கப்பட்டது.

வாகனத்தில் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் ஓட்டுநர்கள் உட்பட உடன் பயணிக்கும் நபர்களும் சீட் பெல்ட் அணிந்த பின் வாகனத்தினை இயக்குவதை உறுதி செய்ய வேண்டும். சீட் பெல்ட்; அணிவதன் மூலம் விபத்து ஏற்படும் போது ஏர்பேக் தானாக செயல்பட்டு ஓட்டுநர்களையும், பயணிகளையும் காக்கும். எனவே மோட்டார் கார் (நான்கு சக்கர வாகனங்கள்) பயன்படுத்தும் போது அனைவரும் சீட்பெல்ட் அணிந்தும், சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக வாகனத்தை இயக்கிட வேண்டும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில், சேஷய்யா சாலை சந்திப்பில், தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி பால்பண்ணை ரவுண்டானா, வடக்கு ராஜ வீதி, பழனியப்பா திரையரங்க முக்கம், மருத்துவமனை சாலை வழியாகச் சென்று ஆயுதப்படை மைதானத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில், 75 மோட்டார் கார்களின் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிந்து பொதுமக்களிடையே சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வட்டார போக்குவரத்து அலுவலர்  ப.ஜெய்சங்கர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வணிக மேலாளர் சுரேஷ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் நடராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top