Close
ஜூலை 7, 2024 9:57 காலை

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா:

சிவகங்கை

வயிரவன்பட்டியில் சுற்றுலாத்துறை  சார்பில்  நடைபெற்ற  பொங்கல்  விழாவில் வெளிநாட்டினருடன்,  பங்கேற்ற மாவட்ட   ஆட்சியர்  ஆஷா  அஜித் , 

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார்  வட்டத்திற்குட்பட்ட  ந.வயிரவன்பட்டியில் , சுற்றுலாத்துறை  மற்றும் ஊர்  பொதுமக்கள் சார்பில்  நடைபெற்ற  பொங்கல்  விழாவில், மாவட்ட   ஆட்சியர்  ஆஷா  அஜித் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் வட்டத்திற்குட்பட்ட ந.வயிரவன்பட்டியில்  சுற்றுலாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் , நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், கலந்து கொண்டு  தெரிவிக்கையில்:

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும்  ரூ.1000 ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் ஆகியவைகளை வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக முழுவதும் அப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், பொங்கல் விழாவிற்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அனைத்து ஊரகப்பகுதிகளிலும் சமத்துவப் பொங்கல் விழாக்களை போன்று மாவட்டத்தின் அந்தந்த பகுதிகளில்  கோலப்போட்டிகள், இளைஞர்களுக்கான பானை உடைத்தல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு விழாக்களும் நடத்தப்பட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தினை நிலைநாட்டுகின்ற வகையில், தமிழர் திருநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி,வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை  மாவட்டத்தில், தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு, மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பத்துார் வட்டத்திற்குட்ப்பட்ட ந.வயிரவன்பட்டியில்  சுற்றுலாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர்களின் புகழை பறைசாற்றுகின்ற வகையில் பரதநாட்டியம் மற்றும் பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், வீரவிளையாட்டுகள் ஆகியவைகளுடன் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில், பிரான்ஸ், ஜெர்மன், டென்மார்க், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து நமது மாவட்டத்திற்கு சுற்றுலா வந்துள்ள 27 வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்துள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர்களைஇ நமது மாவட்டத்தின் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை காண்பிக்கும் வண்ணமும் துறை ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பொங்கல் விழாவில் ,கலந்து கொண்டுள்ள ஊர் பொது மக்கள் அனைவருக்கும், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளவர்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி சுற்றுலா அலுவலர் அ.சங்கர், திருப்பத்தூர் வட்டாட்சியர் (பொ) செல்லமுத்து,  மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top