Close
ஜூன் 30, 2024 5:07 மணி

பாலமேடு அருகே மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பசுக்களுக்கு சிறப்பு பூஜை

மதுரை

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராஜகல்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜகல்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி மாட்டுக் கொட்டத்தில் பொங்கல், வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பசுக்களுக்கு புது கயிறு, கழுத்து மணி, வேஷ்டி, துண்டு. உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பசுக்களுக்கு தீப தூப ஆராதனைகள் செய்யப்பட்டது.பின்னர் பொங்கல் வாழைப்பழம் உள்ளிட்டவைகள், பசுக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபரும் நடிகருமான மறவர்பட்டி கே.ஜி.பாண்டியன் கலந்துகொண்டு பசுக்களுக்கு பழம் பொங்கல் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறவர்பட்டி மாரிச்செல்வம் செய்திருந்தார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top